Tuesday, February 22, 2011

கொண்ட தவம் பலிக்கும்! கோடியாண்டு பேர் நிலைக்கும்.



கொண்ட தவம் பலிக்கும்! கோடியாண்டு பேர் நிலைக்கும்.




பருவதத்தில் வதியும் அம்மா

பார்வதி அம்மா!

தெய்வப் பெயரம்மா-இன்று

தெய்வமானீர் அம்மா!



வேலனை எங்கள்

வெற்றித் திருமகனை

மூலனை எங்கள் முதல்வனை

முத்தமிழர் பகையழிக்கும்

காலனை எங்கள் காவலனை

கரிகால் வளவனைக்

கண்ணகிக்குக் கல்லெடுத்த

சேரனைச் செந்தமிழ்

மாமதுரைமன்னன் பாண்டியனை

ஓருருவாய்ப்

பிரபாகரன் என்னும்

பெரும்பெயரில் பெற்றளித்த

தாயே வணக்கங்கள்!

தலைதாழ்ந்த வணக்கங்கள்!



வேலுப்பிள்ளையெனும்

வீரத்திருமகனார்

பேர்விளக்க வேண்டிப்

பிரபாகரன் என்னும்

புலியீன்ற தாய்ப்புலியாம்

தாயே வணக்கங்கள்

தலைதாழ்ந்த வணக்கங்கள்!



எட்டுகோடித் தமிழர்

எடுத்து அடி வைப்பதற்குக்

கிட்டாத தலைவன் எனும்

எட்டாத இமயத்தை

ஈன்றளித்த பேரிமயத்

தாயே வணக்கங்கள்

தலைதாழ்ந்த வணக்கங்கள்!



உரிமைக்குப் படைதிரட்டி

ஓயாத அலையெழுப்பி

நரிமைக்குக் கரிபூசி

நயவஞ்சகர் அழித்து

நாடாண்ட பெரும்புயலை

ஈன்ற பெரும்புயலாம்

தாயே வணக்கங்கள்

தலைதாழ்ந்த வணக்கங்கள்!



ஊரறுத்த சிங்களனை

உறவறுத்த காடையனை

பேரறுத்து ஆர்க்க

பிரபா கரன் என்னும்

பேரிடியை வல்லிடியைப்

பெற்றளித்த பெருவானத்

தாயே வணக்கங்கள்

தலைதாழ்ந்த வணக்கங்கள்!



உலகத் தமிழரெல்லாம்

உள்ள உணர்வால்

உகுக்கும் கண்ணீரால்

உம்பாதம் பற்றிநின்று

உரைக்கும் சொல் ஒன்று!

உரைக்கும் சொல் ஒன்று!



கொள்ளிவைப்பானா பிள்ளை

கொள்ளிவைப்பானா பிள்ளை-எனக்

கோடிமுறை நினைந்து

நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!

நாடி தளர்ந்திருப்பாய்!



கொள்ளிவைப்பான் உன்பிள்ளை

கொள்ளிவைப்பான் உன்பிள்ளை

குமுறும்எரி மலையாய் வெடித்து

கோடியிடியாய் முழக்கமிட்டு

கொக்கரிக்கும் சிங்களனைக்

கொன்று தீயிலிட்டு

கொன்று தீயிலிட்டு அவனுக்குக்

கொள்ளிவைப்பான் உன்பிள்ளை

கொள்ளிவைப்பான் உன்பிள்ளை



கொண்டவுன் தவம்பலிக்கும்

கோடியாண்டு உன்பேர் நிலைக்கும்

தாயே வணக்கங்கள்

தலைதாழ்ந்த வணக்கங்கள்.



வெளியீடு

உலகத் தமிழர் பேரமைப்பு

சென்னை -85



21.01.2011




Tuesday, February 8, 2011

பூஜாங் பள்ளத்தாக்குப் பயணம் - 2







மலேசியா கெடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு

மலேசியத் திராவிடர் கழக முன்னாள் தலைவர் திரு.இரெ.சு.முத்தையா அவர்களின் அன்பு அழைபின் பேரில் பெரியார் பார்வை ஆசிரியர் கவி அவர்களும் நண்பர் திரு. இராசேந்திரன் அவர்களும் மேற்கொண்ட பயணம்.



பிப்ரவரி மாதம் 4ஆம் நாள் காலை எட்டரை  மணிக்கு திரு. இரெ.சு.முத்தையா அவர்களும் பெரியாரியல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. கோவிந்தசாமி மற்றும் அவரின் துணைவியாருடன் மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பணிமனை (பத்துமலை) யிலிருந்து புறப்பட்டார்கள்.

சுங்கைப் பட்டாணி மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் திரு. துரை.அசோகன் அவர்கள் தலைவர் அவர்களை வரவேற்று பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் காணொளி இதோ......